பொங்கல் திருநாள் : த.வெ.க. தலைவர் விஜய் வாழ்த்து!

இந்தத் தமிழர் திருநாளில் தமிழகம் தலைநிமிர உறுதி ஏற்போம் என த.வெ.க. தலைவர் விஜய் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

vijay tvk

சென்னை : நாளை தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, விசிக தலைவர் திருமாவளவன், கேரளா முதல்வர் பினராயி விஜயன், பசுமைத்தாயகம் தலைவர் முனைவர் சௌமியா அன்புமணி உள்ளிட்ட பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள்.

அவர்களை தொடர்ந்து த.வெ.க தலைவர் விஜய் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பொங்கல் வாழ்த்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது ” உலகமே போற்றி வணங்கும் உழவர் திருக்கூட்டத்தின் ஒப்பற்ற கொண்டாட்டத் திருநாள். கால்நடைகள் நன்மதிப்புப் பெறும் நன்றித் திருநாள்.

காளைகள் திமில் நிமிர்த்திக் களம் காணும் வீரத் திருநாள். 2026இல் உண்மையான சமூக நீதி, உண்மையான சம நீதி, உண்மையான சமத்துவம், உண்மையான அமைதி, உண்மையான பெண்கள் பாதுகாப்பு ஆகியவற்றுடன் பொதுமக்கள் பாதுகாப்பு நிரந்தரமாக, மகிழ்ச்சி நிலைபெற, நம் அனைவருக்குமான நல்லாட்சி லட்சியம் நிறைவேற, அதற்கான முன்னோட்டமாய் 2025ஆம் ஆண்டின் தைத்திருநாளில் பொங்கட்டும் வெற்றிப் பொங்கல்.

பொங்கலோ பொங்கல்! இந்தத் தமிழர் திருநாளில் தமிழகம் தலைநிமிர உறுதி ஏற்போம். அனைவருக்கும் பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்” என நெகிழ்ச்சியுடன் த.வெ.க தலைவர் விஜய் பொங்கல் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்