பொங்கல் பண்டிகை – அரசு பேருந்துகளில் முன்பதிவு தொடக்கம்…!
பொதுவாக ஒவ்வொரு பண்டிகையின் போதும், அரசு போக்குவரத்து கழகம் சார்பில், சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். இவ்வாறு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதன் மூலம், பண்டிகை காலங்களில் ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்படும்.
இந்த நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர் செல்பவர்களுக்கு அரசு விரைவுப் பேருந்துகளில் பயணிப்பதற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியது.
இன்று முதல் அரையாண்டு பொதுத்தேர்வுகள் தொடக்கம்!
போகி பண்டிகைக்கு முதல் நாளான ஜனவரி 13ம் தேதி சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகள் நேரிலும், டிக்கெட் முன்பதிவு மையத்திலும், www.tnstc.in மற்றும் tnstc செயலி வாயிலாகவும் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என போக்குவரத்து துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்தாண்டு ஜனவரி 15 – 17ம் தேதி வரை பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது.