தமிழகத்தில் கோலாகலமாக கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை..பாரம்பரிய உடையில் மாணவிகள் அசத்தல்.!

Default Image
  • தமிழகத்தில் ஆங்காகே பொங்கல் கொண்டாட்டம் தொடங்கியது, அதிலும் கல்லூரிகள், பள்ளிகள் போன்ற பல்வேறு நிறுவனங்கள் பொங்கல் பண்டிகையை ஆரம்பித்தனர்.
  • பொங்கல் பண்டிகையை பாரம்பரிய உடை அணிந்து வந்த மாணவிகள், புதுப்பானையில் பொங்கலிட்டு மகிழ்ந்தனர்.

தமிழகத்தில் ஆங்காகே பொங்கல் கொண்டாட்டம் தொடங்கியது, அதிலும் கல்லூரிகள், பள்ளிகள் போன்ற பல்வேறு நிறுவனங்கள் பொங்கல் பண்டிகையை ஆரம்பித்தனர். ஈரோடு மாவட்டம் அந்தியூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜாகிருஷ்ணன் கலந்து கொண்டார். பொங்கல் பானையை சுற்றி மாணவிகளுடன் கும்மியடித்த அவர், உரியடிக்கும் போட்டியிலும் பங்கேற்றார்.

அதைத்தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் காவல்துறை சார்பில் மும்மதத்தினரும் பங்கேற்ற சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டு பொங்கலிட்டு மகிழ்ந்தனர். ஆட்சியர் சிம்ரான்ஜித் சிங், டிஎஸ்பி சுரேஷ் குமார் உள்ளிட்டோர் விவசாய பணிகளை மேற்கொண்டனர். விழாவின் ஒருபகுதியாக கரகாட்டம் உள்ளிட்ட கிராமிய கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

மேலும், சேலம் மாவட்டம் அம்மாப்பேட்டையில் தனியார் மகளிர் கல்லூரியில் பொங்கல் பண்டிகை வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது. பாரம்பரிய உடை அணிந்து வந்த மாணவிகள், புதுப்பானையில் பொங்கலிட்டு மகிழ்ந்தனர். விழாவின் ஒருபகுதியாக மாணவிகள் பங்கேற்ற கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

திருநெல்வேலி ஆதரவற்றோர் இல்லத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. முதியவர்கள் புத்தாடை அணிந்து புதுப்பானையில் பொங்கலிட்டனர். இந்நிகழ்ச்சி மன நிறைவையும், நிம்மதியையும் தருவதாக தெரிவித்தனர். இதுபோன்று தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பொங்கல் பண்டிகையை ஆரம்பித்துவிட்டனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்