பொங்கல் பண்டிகை : பயணிகள் கவனத்திற்கு! மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!

பொங்கல் விடுமுறையை முன்னிட்டு ஜனவரி 14, 15 மற்றும் 16ம் தேதிகளில் ஞாயிறு/விடுமுறை நேர அட்டவணையின் படி மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

pongal metro train

சென்னை :  பொங்கல் விடுமுறையை முன்னிட்டு பயணிகள் பலரும் மெட்ரோ ரயில்களை புக்கிங் செய்து வருகிறார்கள். இந்த சூழலில், பொங்கல் நாளான நாளை ஜனவரி 14, மற்றும் 15 மற்றும் 16ம் தேதிகளில் ஞாயிறு/விடுமுறை நேர அட்டவணையின் படி மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும் என அட்டவணை ஒன்றை மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

இது குறித்து நிர்வாகம் வெளியிட்டுள்ள பதிவில் ” பொங்கல் விடுமுறையை முன்னிட்டு 2025 ஆம் ஆண்டு ஜனவரி 14 (செவ்வாய்க்கிழமை), 15 (புதன்கிழமை) மற்றும் 16 (வியாழக்கிழமை) ஆகிய தேதிகளில் ஞாயிறு/விடுமுறை நேர அட்டவணையின்படியும், 17-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) சனிக்கிழமையின் அட்டவணையின் படியும் மெட்ரோ இரயில்கள்இயக்கப்படும்

ஞாயிறு/விடுமுறை நேர அட்டவணை:

  • 1காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்.
  • 2. காலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்.
  • 3. மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள்இயக்கப்படும்.
  • 4. இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்.

சனிக்கிழமை அட்டவணை:

  • 1. காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்.
  • 2. காலை 8 மணி முதல் 11 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்.
  • 3. காலை 5 மணி முதல் 8 மணி வரை, காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை மற்றும் இரவு 8 மணிமுதல் 10 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்.
  • 4. இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும். பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதல் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்