பொங்கல் பண்டிகை : பயணிகள் கவனத்திற்கு! மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!
பொங்கல் விடுமுறையை முன்னிட்டு ஜனவரி 14, 15 மற்றும் 16ம் தேதிகளில் ஞாயிறு/விடுமுறை நேர அட்டவணையின் படி மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை : பொங்கல் விடுமுறையை முன்னிட்டு பயணிகள் பலரும் மெட்ரோ ரயில்களை புக்கிங் செய்து வருகிறார்கள். இந்த சூழலில், பொங்கல் நாளான நாளை ஜனவரி 14, மற்றும் 15 மற்றும் 16ம் தேதிகளில் ஞாயிறு/விடுமுறை நேர அட்டவணையின் படி மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும் என அட்டவணை ஒன்றை மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
இது குறித்து நிர்வாகம் வெளியிட்டுள்ள பதிவில் ” பொங்கல் விடுமுறையை முன்னிட்டு 2025 ஆம் ஆண்டு ஜனவரி 14 (செவ்வாய்க்கிழமை), 15 (புதன்கிழமை) மற்றும் 16 (வியாழக்கிழமை) ஆகிய தேதிகளில் ஞாயிறு/விடுமுறை நேர அட்டவணையின்படியும், 17-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) சனிக்கிழமையின் அட்டவணையின் படியும் மெட்ரோ இரயில்கள்இயக்கப்படும்
ஞாயிறு/விடுமுறை நேர அட்டவணை:
- 1காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்.
- 2. காலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்.
- 3. மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள்இயக்கப்படும்.
- 4. இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்.
சனிக்கிழமை அட்டவணை:
- 1. காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்.
- 2. காலை 8 மணி முதல் 11 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்.
- 3. காலை 5 மணி முதல் 8 மணி வரை, காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை மற்றும் இரவு 8 மணிமுதல் 10 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்.
- 4. இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும். பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதல் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்.
2025 ஆம் ஆண்டு ஜனவரி 14, 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் ஞாயிறு/விடுமுறை நேர அட்டவணையின்படியும் 17 ஆம் தேதி சனிக்கிழமை அட்டவணையின் படியும் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்.
பொங்கல் விடுமுறையை முன்னிட்டு 2025 ஆம் ஆண்டு ஜனவரி 14 (செவ்வாய்க்கிழமை), 15 (புதன்கிழமை) மற்றும் 16…
— Chennai Metro Rail (@cmrlofficial) January 13, 2025
லேட்டஸ்ட் செய்திகள்
AUSvENG : முடிஞ்சா தொட்டுப்பார்.! வெளுத்து வாங்கிய பென் டக்கெட்! ஆஸி.க்கு இமாலய இலக்கு!
February 22, 2025
காமராஜர் ஆட்சி : காங்கிரஸ் கட்சிக்குள் மோதல்? செல்வப்பெருந்தகை vs மாணிக்கம் தாகூர்!
February 22, 2025
AUS v ENG : முக்கிய வீரர்கள் இல்லாமல் வெற்றிபெறுமா ஆஸி…இங்கிலாந்துக்கு எதிராக பந்துவீச்சு தேர்வு!
February 22, 2025
அந்த ரூ.2500 எங்க? கேள்வி கேட்ட ஆம் ஆத்மி! உடனடியாக நிறைவேற்றிய பாஜக!
February 22, 2025