பொங்கல் பண்டிகை .! தமிழகத்தில் 29,213 கூடுதல் பேருந்துகள்- விஜயபாஸ்கர் பேட்டி.!
- பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் 29,213 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
- வரும் 10-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
தமிழகத்தில் தீபாவளி, பொங்கல், போன்ற விடுமுறையின் போது பல்வேறு நகரங்களில் தங்கி வேலை செய்யும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வார்கள்.அதிலும் சென்னை போன்ற பெரும் நகரங்களில் இருந்து வேலை செய்யும் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்கின்றனர்.
அந்த நேரங்களில் கூட்ட நெரிசலைத் தவிர்க்க அரசு போக்குவரத்துக்கழகம் வழக்கமாக இயங்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கி வருகிறது.இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் 29,213 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
வருகின்ற 10-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். சென்னையில் தற்போதையபேருந்து நிலையங்களில் இருந்து பேருந்துகள் இயங்கும்.மேலும் கோயம்பேட்டில் உள்ள பேருந்து நிலையத்தில் கட்டுப்பாடு அறை மூலம் பேருந்துகள் இயக்கம் கண்காணிக்கப்பட உள்ளனர்.சிறப்பு பேருந்துகளின் முன்பதிவு செய்ய 17 மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது எனவும் கூறினார்.