பொங்கல் பண்டிகை: 14,104 சிறப்பு பேருந்துகள் இயக்கம்… எந்தெந்த ஊருக்கு எத்தனை பெருந்து இயக்கப்படுகிறது.?
பொங்கல் பண்டிகையையொட்டி 10, 11, 12, 13 ஆகிய நாட்களில் 14,104 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
சென்னை: தமிழகத்தில் பண்டிகை காலங்களிலும் வார இறுதி நாள் விடுமுறைகளை முன்னிட்டும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். வரும் 14ம் தேதி பொங்கல் கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்காக பொதுமக்கள் பலர் தங்களது சொந்த ஊருக்கு செல்வார்கள்.
இந்த நிலையில், அவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வர, ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். அதன்படி, பொங்கல் பண்டிகையையொட்டி 10, 11, 12, 13 ஆகிய நாட்களில் 14,104 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
இதில், சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக 3 பேருந்து நிலையங்களில் இருந்து 14,104 சிறப்பு பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து 7,800 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும் என போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது. வழக்கமாக இயக்கப்படும் 8,368 பேருந்துகளுடன் கூடுதலாக 5,736 பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு பேருந்துகள் சென்னையில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கும், பிற மாவட்டங்களுக்கு இடையேயும் இயக்கப்பட உள்ளன. மேலும், பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்ப வசதியாக 15ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை 15,800 பேருந்துகள் இயக்கபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.