பொங்கல் பண்டிகை – அரசு பஸ்ஸில் செல்ல 1.62 லட்சம் முன்பதிவு..!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து வெளியூர் செல்ல இதுவரை அரசு பேருந்துகளில் 1.62 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 16,932 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஜனவரி 12 முதல் 14 வரை சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு 10,749 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
பொங்கல் பண்டிகை முடிந்த பின் திரும்பி வர ஏதுவாக ஜனவரி 16-ஆம் தேதி முதல் ஜனவரி 18-ஆம் தேதி வரை 15,619 பேருந்துகள் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து வெளியூர் செல்ல இதுவரை அரசு பேருந்துகளில் 1.62 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.