இன்று தை அமாவாசை! முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து பொதுமக்கள் வழிபாடு…

Published by
Venu

முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து பொதுமக்கள் வழிபாடு!
ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தி வருகின்றனர். முன்னோர்களுக்கு திதி கொடுத்து தர்ப்பணம்  செய்தனர். தொடர்ந்து இராமநாதசுவாமி கோயிலுக்குள் உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராடி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
Image result for kutralam amavasai
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள தாமிரபரணி நதியில், அதிகாலை 4 மணி முதலே ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குவிந்தனர். அவர்கள், தாமிரபரணியில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர். அமாவாசை நாட்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டால், அவர்களுக்கு செய்யத் தவறிய கடமைகளை செய்தது போன்றாகும் என்பதால், தர்ப்பணம் கொடுப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
வேதாரண்யம் அருகே கோடியக்கரையில் தை அமாவாசையை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான மக்கள் கடலில் புனித நீராடினர். பின்பு  வேதாரண்யம் சன்னதி கடல் என்று அழைக்கப்படும் வேதநதியிலும் பலர் புனித நீராடினார்.
முன்னதாக மூதாதையர்களுக்கு திதி கொடுத்து கடலில் வெற்றிலை, பாக்கு, எலுமிச்சை பழம், கருவமணி போன்றவற்றை கடலில் விட்டு  சூரியனை வழிப்பட்டனர். தொடர்ந்து, வேதாரண்யேஸ்வரர் சுவாமிக்கும் துர்க்கை அம்மனுக்கும் அர்ச்சனை செய்து அவர்கள் வழிப்பட்டனர்.

தை அமாவாசை தினமான இன்று குற்றாலத்தில் அதிகாலை முதலே ஏராளமானோர் தர்ப்பணம் செய்ய மெயின் அருவிக்கரையில் குவிந்தனர். தர்ப்பணம் செய்து கொடுக்க ஏராளமான வேத விற்பன்னர்களும் அங்கு குவிந்திருந்தனர். அருவியில் புனித நீராடி பின்னர் தங்கள் முன்னோர்களை நினைத்து வழிபட்டு எள், தண்ணீர் தெளித்து தர்ப்பணம் செய்தனர்.
மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைதிருங்கள் …

Recent Posts

நாடாளுமன்ற வளாகத்தில் தனித்தனியாக போராட்டம் நடத்தும் பாஜக – காங்கிரஸ்!

டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…

12 minutes ago

அமித்ஷா பேச்க்கு வலுக்கும் எதிர்ப்புகள்! ரயிலை மறித்த விசிக, போராட்டம் அறிவித்த திமுக…

சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…

42 minutes ago

தொடர்ந்து சரியும் தங்கம் விலை… இன்றைய நிலவரம் என்ன?

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…

1 hour ago

Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…

சென்னை : நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று முன்தினம் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு பதிலாக கடவுள்…

1 hour ago

பயப்படவேண்டாம் மிதமான மழைக்கு தான் வாய்ப்பு! வெதர்மேன் கொடுத்த அப்டேட்!

சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தொடர்ந்து அதே பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த…

1 hour ago

ஆப்பிரிக்காவை உலுக்கிய சிடோ புயல்! 45 பேர் பலி!

ஆப்பிரிக்கா : இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வலுப்பெற்றது. இதனையடுத்து, இந்த…

2 hours ago