இன்று தை அமாவாசை! முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து பொதுமக்கள் வழிபாடு…
முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து பொதுமக்கள் வழிபாடு!
ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தி வருகின்றனர். முன்னோர்களுக்கு திதி கொடுத்து தர்ப்பணம் செய்தனர். தொடர்ந்து இராமநாதசுவாமி கோயிலுக்குள் உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராடி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள தாமிரபரணி நதியில், அதிகாலை 4 மணி முதலே ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குவிந்தனர். அவர்கள், தாமிரபரணியில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர். அமாவாசை நாட்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டால், அவர்களுக்கு செய்யத் தவறிய கடமைகளை செய்தது போன்றாகும் என்பதால், தர்ப்பணம் கொடுப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
வேதாரண்யம் அருகே கோடியக்கரையில் தை அமாவாசையை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான மக்கள் கடலில் புனித நீராடினர். பின்பு வேதாரண்யம் சன்னதி கடல் என்று அழைக்கப்படும் வேதநதியிலும் பலர் புனித நீராடினார்.
முன்னதாக மூதாதையர்களுக்கு திதி கொடுத்து கடலில் வெற்றிலை, பாக்கு, எலுமிச்சை பழம், கருவமணி போன்றவற்றை கடலில் விட்டு சூரியனை வழிப்பட்டனர். தொடர்ந்து, வேதாரண்யேஸ்வரர் சுவாமிக்கும் துர்க்கை அம்மனுக்கும் அர்ச்சனை செய்து அவர்கள் வழிப்பட்டனர்.
தை அமாவாசை தினமான இன்று குற்றாலத்தில் அதிகாலை முதலே ஏராளமானோர் தர்ப்பணம் செய்ய மெயின் அருவிக்கரையில் குவிந்தனர். தர்ப்பணம் செய்து கொடுக்க ஏராளமான வேத விற்பன்னர்களும் அங்கு குவிந்திருந்தனர். அருவியில் புனித நீராடி பின்னர் தங்கள் முன்னோர்களை நினைத்து வழிபட்டு எள், தண்ணீர் தெளித்து தர்ப்பணம் செய்தனர்.
மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைதிருங்கள் …