இன்று புதுச்சேரியில் நிதிநிலை குறித்து தலைமைச் செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அவர்கள் ஆலோசனை நடத்தினார். அதன் பின்பு அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், கொரோனா வைரஸ் தொற்றால் புதுச்சேரிக்கு 40% வருமானம் குறைந்துள்ளதாகவும் மத்திய அரசு இழப்பீட்டை நான்கு மாதமாக தரவில்லை எனவும் 14 சதவீத இழப்பீடு தரவேண்டும் எனவும் 560 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது எனவும் கூறியுள்ளார்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் அனுப்பியுள்ளேன், 41 சதவீதம் வருவாய் தர கடிதம் எழுதினேன். பதில் வரவில்லை, தற்போது 21 சதவீதம்தான் தருகிறார்கள் எனவும் முதல்வர் தெரிவித்துள்ளார். மேலும் புதுச்சேரியில் 70 பேர் கொரோனாவால் உயிரிழந்ததாகவும், 55 பேர் 60 வயதுக்கு மேற்பட்டோர் எனவும், புற்றுநோய், சிறுநீரக நோய், நீரிழிவு நோய், இதய நோய் என பல வியாதிகளில் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் எனவும் அகில இந்திய அளவை விட குறைவு எனவும் கூறியுள்ளார்.