சிலை கடத்தல் வழக்குகள்! பொன் மாணிக்கவேல் தரப்புக்கு அதிரடி உத்தரவிட்ட உச்சநீதிமன்றம்!

Default Image
  • சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க உச்சநீதிமன்றம் பொன் மாணிக்கவேலுக்கு அளிக்கப்பட்டிருந்த சிறப்பு பதவிக்காலம் சென்ற மாதம் 30ஆம் தேதி நிறைவுற்றது.
  • அதனால், பொன் மாணிக்கவேல், சிலை கடத்தல் ஆவணங்களை உயர் அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.  

சிலை கடத்தல் சிறப்பு பிரிவு அதிகாரியாக இருந்த பொன் மாணிக்கவேல் அவர்களுக்கு பதவி காலம் முடிவு பெற்றபிறகு, சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க மேலும் பதவி காலத்தை நீடித்து உச்சநீதிமன்றம் கூறியிருந்தது. அந்த பதவி காலம் கடந்த நவம்பர் மாதம் 30ஆம் தேதி நிறைவு பெற்றது.

இதனை தொடர்ந்து பொன் மாணிக்கவேல், சிலை கடத்தல் தொடர்பான வழக்கு ஆவணங்களை உயர் அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும் என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தது.

இந்த வழக்கில் ஆவணங்களை பொன் மாணிக்கவேல் இம்மாதம் 2ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம்  உத்தரவிட்டது. ஆனால் அவர் சமர்ப்பிக்கவில்லை ஆதலால், தமிழ்நாடு அரசு, பொன் மாணிக்கவேல் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போட்டது. அதற்கடுத்து பொன் மாணிக்கவேல் சார்பில் டிசம்பர் 16ஆம் தேதி வரை காலக்கெடு கேட்கப்பட்டது.

அதன்படி விசாரணை நேற்று நடைபெற்றது. உச்சநீதிமன்ற நீதிபதி அசோக் பூஷன் இந்த வழக்கை விசாரித்தார். அப்போது பொன் மாணிக்கவேல் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சாயீ தீபக் கூறுகையில், சிலை கடத்தல் தொடர்பான 17,754 பக்கங்கள் கொண்ட ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டுவிட்டதாக கூறினார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக தமிழக அரசு சார்பில் பேசிய வழக்கறிஞர் முகில் ரோத்தகி, பொன் மாணிக்கவேல் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில் முக்கிய சான்றுகள் இல்லை. என கூறினார்.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி, ‘ இன்னும் இரண்டு வாரத்திற்குள் தமிழக அரசிடம் உரிய ஆணவன்களை சமர்ப்பிக்க வேண்டும் என கூறி பொன் மாணிக்கவேல் தரப்பிற்கு உத்தரவிட்டது.’ மேலும் வழக்கை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்து உத்தரவிடபட்டது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்