35 ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்ட சிலைகடத்தல் வழக்கு! ஆஸ்திரேலியா வரை சென்று சிலையை மீட்ட பொன் மாணிக்கவேல்!

Default Image

சிலை கடத்தல் பிரிவு சிறப்பு அதிகாரியாக பணியாற்றி வருகிறார் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி பொன் மாணிக்கவேல். இவர் தலைமையிலான சிலைகடத்தல் பிரிவு சிறப்பு குழு திருநெல்வேலியில், காணாமல் போன சிலையை கண்டறிய முடியவில்லை என 37 வருடங்களுக்கு முன்னர் காணாமல் போன சிலையை கண்டுபிடித்துள்ளனர்.

திருநெல்வேலி, கள்ளிடைக்குறிச்சியில் உள்ள குலசேகரமுடையர் உடனுறை அறம் வளர்த்த நாயகி அம்மன் கோவிலில் இருந்த நடராஜர் சிலை 37 வருடங்களுக்கு முன்னர் காணாமல் போனது. அப்போது திருநெல்வேலி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து பின்னர் 35 வருடங்களுக்கு முன்னர் இதில் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை என இந்த புகார் முடித்துவைக்கப்பட்டது.

அந்த சிலையை பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிறப்பு குழு ஆஸ்திரேலியா வரை சென்று கண்டறிந்துள்ளது. அங்குள்ள அருங்காட்சியகத்தில் இருந்து, அந்த சிலையை மீட்டு, விமானம் மூலம் டெல்லி கொண்டுவந்து, அங்கிருந்து ரயில் மூலம் சென்னை ரயில் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது. கொண்டுவரப்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்