பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள் தேர்வுக்கான விடைக்குறிப்புகள் http://trb.nic.in என்ற தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அரசு பல்தொழில்நுட்ப கல்லூரி விரிவுரையாளர்கள் காலிப்பணியிடங்களுக்கு நேரடி நிமனத்திற்கான பணித்தெரிவு சார்ந்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிக்கை எண்:14/2019. நாள் 27.112019ன்படி ஆசிரியர் தேர்வு வாரியத்தால் Computer Based Examination 08.12.2021 முதல் 13.12.2021 வரை காலை/மாலை இருவேளைகள் தேர்வு நடத்தப்பட்டது. தற்பொழுது தேர்வுக்கான கேள்விகளுக்கு உரிய தற்காலிக உத்தேச விடைக்குறிப்புகள் (Tentative Key Answers) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளமான www.trb.tn.nic.in வெளியிடப்பட்டு உள்ளன.
தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேதியில் எந்த Sessionல் தேர்வு எழுதினார்களோ அந்த Sessionக்கு உரிய Master Question Paper TRB website-ல் வெளியிடப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள தற்காலிக விடைகுறிப்பிற்கு objection தெரிவிக்கும் போது அதற்குரிய சான்றாவணங்களை இணைக்க வேண்டும். சான்றாவணங்கள் இணைக்கப்படாத முறையீடுகள் பரிசீலனைக்கு எற்றுக்கொள்ளப்படமாட்டாது. இவையனைத்தும் முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள தற்காலிக உத்தேச விடைக்குறிப்பின் மீது தேர்வர்கள் ஆட்சேபனை தெரிவிக்க விரும்புவோர் 07.01 2022 பிற்பகல் முதல் 10.01.2022 பிற்பகல் 5.30 மணி வரை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதள முகவரியில் மட்டுமே ஆதாரங்களுடன் பதிவு செய்திடல் வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பாடப்புத்தகங்கள்/ மேற்கோள் புத்தகங்கள் (Standard Text Books: Reference Books) ஆதாரம் மட்டுமே அளிக்க வேண்டும்.
கையேடுகள் மற்றும் தொலைதூார கல்வி நிறுவனங்களின் வெளியீடுகள், ஆதாரங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. தபால் அல்லது பிறவழி முறையீடுகள் ஏற்கப்பட மாட்டாது. அவை நிராகரிக்கப்பட்டதாக கருதப்படும். மேலும் பாட வல்லுநர்களின் முடிவே இறுதியானது என்று அறிவிக்கப்படுகின்றது.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…