#Breaking:மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாசலம் வீட்டில் மேலும் 3 கிலோ தங்கம் – லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல்..!

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாசலம் வங்கி லாக்கர்களை திறந்து சோதனை செய்ய லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
2019-ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தலைவராக இருந்து வரும் வெங்கடாசலம் அவர்களின், இல்லம் மற்றும் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வெங்கடாசலம் அவர்கள் வருமானத்திற்கு மீறிய சொத்துக்களை சேர்த்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
அதன்படி,அவரது வீட்டில் இருந்து 13.5 லட்சம் பணம்,எட்டு கிலோ தங்கம் மற்றும் 10 கிலோ சந்தனப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.இதனைத் தொடர்ந்து,சென்னை கிண்டியில் உள்ள அலுவலகம் உள்ளிட்ட 5 இடங்களில் சோதனை நடைபெற்றது.
இந்நிலையில்,வெங்கடாசலம் வீட்டில் மேலும், 3 கிலோ தங்கத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.இதனைத் தொடர்ந்து,அவரது வங்கி லாக்கர்களை திறந்து சோதனை செய்ய லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்தியா vs பாகிஸ்தான் : நதிநீர் நிறுத்தம், மருத்துவ சேவை நிறுத்தம்., பாக். வான்வழி தடை!
April 24, 2025
பஹல்காம் தாக்குதல் : “முஸ்லீம்கள் – இந்துக்களை தனித்தனியாக பிரிக்க சொன்னார்கள்?” தந்தையை இழந்த சிறுவன் பகீர் தகவல்!
April 24, 2025