வாக்குப்பதிவு நிறுத்தம்…! எதற்கு ஒட்டு போட்டாலும் பாஜக சின்னத்தில் தான் பதிவாகிறது…!
ருதுநகர் சத்ரியா பள்ளி சாவடியில், எந்த சின்னத்தில் வாக்களித்தால் பாஜக சின்னம் பதிவதாக புகார்கள் எழுந்துள்ளது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் அனைவரும் காலையிலேயே வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.
இந்நிலையில், விருதுநகர் சத்ரியா பள்ளி சாவடியில், எந்த சின்னத்தில் வாக்களித்தால் பாஜக சின்னம் பதிவதாக புகார்கள் எழுந்துள்ளது. இதனையடுத்து, வாக்காளர்கள் புகாரை தொடர்ந்து வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டு மின்னணு இயந்திரத்தை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.