மதுரை மேற்கு தொகுதி மருது பாண்டியர் நகரில் உள்ள வாக்குப்பதிவு மையத்தில் வாக்கு இயந்திரம் வேலை செய்யாததால் அங்கு வாக்குப்பதிவு துவங்க தாமதமானது.
தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு, காலை 7 மணிக்கு தொடங்கியது. இந்த வாக்குப்பதிவு, மாலை 7 மணி வரை நடைபெறும். இந்த தேர்தலில் 3,08,38,473 ஆண் வாக்காளர்களும், 3,18,28,727 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 6,26,67,200 பேர் வாக்களிக்கவுள்ளனர்.
இந்த தேர்தலில் வாக்களிக்க தமிழகம் முழுவதும் 88,937 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு தொடங்கும் முன், வாக்கு இயந்திரம் சரியாக செயல்படுகிறது என்பதை காட்டுவதற்கு முகவர், பணியாளர் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்பொழுது மதுரை மேற்கு தொகுதி மருது பாண்டியர் நகரில் உள்ள வாக்குப்பதிவு மையத்தில் வாக்கு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதாக கூறப்பட்டது.
இதனால் வாக்களிக்க வந்த பொதுமக்கள் சலசலப்புக்கு உள்ளானார்கள். போலீசார் சமாதானம் செய்தபின் அவர்கள் அமைதியாக்கினார்கள். அதன்பின் சரியாக 7.45 மணிக்கு அங்கு வாக்குப்பதிவு துவங்கப்பட்டது. மேலும், அந்த வாக்குச்சாவடி மையத்தில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை சரியாக பின்பற்றவில்லை எனவும் பொதுமக்கள் புகாரளித்து வருகின்றனர்.
ஹைதராபாத்: 'புஷ்பா 2' சிறப்புக் காட்சியின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு, பெண் உயிரிழந்ததற்கு, 'போலீஸ் சொன்னதை மதிக்காமல், அல்லு அர்ஜுன்…
சென்னை: வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதை தொடர்ந்து, தூத்துக்குடி உட்பட 9 துறைமுகங்களில் நேற்று முன் தினம்…
சென்னை : அண்மையில் புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசுகையில், பல்வேறு குற்ற வழக்குகளில் சிக்கியவர்களை பாஜக…
திருவண்ணாமலை : இன்று (டிசம்பர் 21) பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் திருவண்ணாமலை சந்தைமேடு பகுதியில் 'உழவர் பேரியக்க மாநாடு'…
திருவள்ளூர் : தமிழ்நாடு ஊர்காவல் படை காவலர்களுக்கான காலிபணியிடங்களை நிரப்பும் அறிவிப்புகள் குறிப்பிட்ட இடைவெளியில் மாவட்ட வாரியாக அறிவிக்கப்பட்டு வருகின்றன.…
தெலங்கானா : 'புஷ்பா 2' படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க வந்த பெண் உயிரிழந்த விவகாரம் குறித்து, தெலங்கானா முதல்வர்…