தமிழக சட்டப்பேரவை தேர்தல் பணியில் ஈடுபடும் காவலர்கள் உட்பட இதர பணியாளர்களுக்கு இன்று முதல் தபால் வாக்கு செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனைதொடர்ந்து அமைதி முறையில் தேர்தல் நடைபெறவும், மக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதலாக பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது. இதற்கு போலீசார், துணை ராணுவத்தினர் ஈடுபடவுள்ளார்.
இந்நிலையில், தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் தபால் வாக்கு செலுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதனைதொடர்ந்து ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் போலீசார் உட்பட தேர்தல் பணியில் ஈடுபடும் பணியாளர்கள் தபால் வாக்கு செலுத்த தனி மையம் அமைக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், சென்னையில் தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசார் மற்றும் இதர பணியாளர்களுக்கு இன்று முதல் தபால் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தபால் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள நிலையில், அவர்கள் சீல் வைக்கப்பட்ட பெட்டியில் தங்களின் வாக்குகளை செலுத்தி வருகின்றனர். சென்னையில் தபால் வாக்கு செலுத்த 16 மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…