பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் கைது செய்யப்பட்ட 4பேர் (சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார்) மீதான குண்டர் சட்டம் உறுதி செய்யப்பட்டுள்ளது
கடந்த சில தினங்களாக தமிழகத்தை உலுக்கிய வரும் சம்பவம் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை.அதாவது கடந்த 7 ஆண்டுகளாக சுமார் 200-க்கும் மேற்பட்ட பெண்களை ஆசை வார்த்தைகள் பேசி தன் வலையில் வீழ்த்தி கூட்டு வன்புணர்வு செய்தனர் சுமார் 20-க்கும் நபர்கள் கொண்ட கும்பல்.
இதில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்பட்ட 4 பேர்(சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார்) கைது செய்யப்பட்டு அவர்கள் மீது குண்டர் சட்டமும் போடப்பட்டது.
மேலும் இவர்களின் பின்னணியில் பல ஆளுங்கட்சி நபர்களும் இருக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டது.மேலும் இந்த வழக்கை டிஜிபி ராஜேந்திரன் சிபிசிஐடிக்கு மாற்றினார்.பின்பு இதற்க்கு அரசாணை வெளியிட்டு, விசாரணையை துரிதப்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டது.
பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் கைது செய்யப்பட்ட 4பேர்(சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார்) நேற்று சென்னையில் உள்ள அறிவுரை கழகத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.4 பேர் மீதான மீதான குண்டர் சட்டத்தை சென்னையில் உள்ள அறிவுரை கழகம் உறுதி செய்தது.இதனால் கோவை மாவட்ட காவல்துறை வழக்கில் கைது செய்யப்பட்ட 4பேர் (சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார்) மீதான குண்டர் சட்டம் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.
பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக 5வது நபராக மணிவண்ணன் என்பவர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…