பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் சிறையில் உள்ள திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன் ஆகிய 5பேரின் நீதிமன்ற காவல் மே 6ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களாக தமிழகத்தை உலுக்கிய வரும் சம்பவம் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை.அதாவது கடந்த 7 ஆண்டுகளாக சுமார் 200-க்கும் மேற்பட்ட பெண்களை ஆசை வார்த்தைகள் பேசி தன் வலையில் வீழ்த்தி கூட்டு வன்புணர்வு செய்தனர் சுமார் 20-க்கும் நபர்கள் கொண்ட கும்பல்.
இதில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்பட்ட 4 பேர்(சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார்) கைது செய்யப்பட்டு அவர்கள் மீது குண்டர் சட்டமும் போடப்பட்டது.
மேலும் இவர்களின் பின்னணியில் பல ஆளுங்கட்சி நபர்களும் இருக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டது.மேலும் இந்த வழக்கை டிஜிபி ராஜேந்திரன் சிபிசிஐடிக்கு மாற்றினார்.பின்பு இதற்க்கு அரசாணை வெளியிட்டு, விசாரணையை துரிதப்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டது.பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக 5வது நபராக மணிவண்ணன் என்பவர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் சிறையில் உள்ள திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன் ஆகிய 5பேரின் நீதிமன்ற காவல் மே 6ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…