பொள்ளாச்சி பாலியல் வழக்கு.! எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க கோரி புதிய மனு.!
பொள்ளாச்சி அரசாணை தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் புதிய மனு.
பொள்ளாட்சி விவகாரம் – பழனிசாமியை விசாரிக்க மனு:
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில், பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்களுடன் அரசாணை வெளியிட்டது தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்களின் பெயரை வெளியிட்ட அப்போதைய காவல் அதிகாரி பாண்டியராஜனை பணிநீக்கம் செய்யவும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் நடந்தபோது கோவை எஸ்பியாக இருந்த பாண்டியராஜன், பாதிக்கப்பட்ட பெண்களின் பெயரை வெளியிட்டது சர்ச்சையானது. பாதிக்கப்பட்டோரின் பெயர்களை வெளியிட்டது தொடர்பாக முதல்வரின் தனிப்பிரிவு, டிஜிபியிடம் புகார் அளிக்கப்பட்டது.
முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளித்த நிலையில், முன்னாள் முதல்வர் பழனிசாமியிடம் விசாரணை நடத்தக்கோரி உயர்நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கலாகியுள்ளது. பாலசந்தர் என்பவர் தொடர்ந்த வழக்கை நாளை மறுநாள் திங்கள்கிழமை விசாரிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்.