பொள்ளாச்சி பாலியல் விவகாரம்: வழக்கு தொடர்பான ஆவணங்களை சிபிஐயிடம் ஒப்படைத்தது சிபிசிஐடி

Default Image

பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கு தொடர்பான ஆவணங்களை சிபிஐயிடம் ஒப்படைத்தது சிபிசிஐடி.

கடந்த சில தினங்களாக தமிழகத்தை உலுக்கிய வரும்  சம்பவம் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை.அதாவது கடந்த 7 ஆண்டுகளாக சுமார் 200-க்கும் மேற்பட்ட பெண்களை ஆசை வார்த்தைகள் பேசி தன் வலையில் வீழ்த்தி கூட்டு வன்புணர்வு செய்தனர் சுமார் 20-க்கும்  நபர்கள் கொண்ட கும்பல்.

இதில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்பட்ட 4 பேர்(சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார்) கைது செய்யப்பட்டு அவர்கள் மீது குண்டர் சட்டமும் போடப்பட்டது.

மேலும் இவர்களின் பின்னணியில் பல ஆளுங்கட்சி நபர்களும் இருக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டது.மேலும் இந்த வழக்கை  டிஜிபி ராஜேந்திரன் சிபிசிஐடிக்கு மாற்றினார்.பின்பு இதற்க்கு அரசாணை வெளியிட்டு, விசாரணையை துரிதப்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டது.பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக 5வது நபராக மணிவண்ணன் என்பவர் கைது செய்யப்பட்டார்.பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக களத்தில் இறங்கியது சிபிஐ .தமிழக அரசின் பரிந்துரையின் பேரில் வழக்குப்பதிவு செய்து சிபிஐ  விசாரணையை துவங்கியது.

இந்நிலையில் வழக்கு தொடர்பான ஆவணங்களை சிபிஐயிடம் ஒப்படைத்தது சிபிசிஐடி.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்