பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கு சிபிஐக்கு மாற்றம்: அரசாணை வெளியீடு

Published by
Vignesh
  • கைது செய்யப்பட்டு அவர்களின் செல்போன்களில் இருந்து சுமார் 1500க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட பெண்களின் ஆபாச வீடியோக்களை கைப்பற்றியது காவல்துறை.
  • வழக்கை சிபிஐக்கு மாற்றி, விசாரணையை துரிதப்படுத்தவும் இந்த கொடுங்குற்றத்தின் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பதை அறியவும் அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு

பொள்ளாச்சியில் கடந்த 7 ஆண்டுகளாக 200க்கும் மேற்பட்ட பெண்கள் குறிப்பாக பள்ளி கல்லூரி பெண்களை காதல் மற்றும் நட்பு வலையில் வீழ்த்தி பணம் நகை பறிப்பு மற்றும் பாலியல் வன்முறைகளில் ஈடுபட்டு வந்த கும்பலில் நான்கு நபர்களை சில தினங்களுக்கு முன்பு காவல்துறை கைது செய்தது.

அப்போது நடத்தப்பட்ட விசாரணையில் இக்கும்பலில் 20க்கும் மேற்பட்ட நபர்கள் உள்ளதாக தெரிய வந்துள்ளது. மேலும் இதில் முக்கிய குற்றவாளியாக பார்க்கப்படும் திருநாவுக்கரசு கைதாவதற்கு முன்பு வெளியிட்ட வீடியோ ஒன்று பல அரசியல் பிரபலங்கள் இதில் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் அவர்கள் அனைவரையும் நாம் எப்பாடுபட்டாவது வெளியே கொண்டு வருவேன் என்றும் பேசியிருந்தார்.

கைது செய்யப்பட்டு அவர்களின் செல்போன்களில் இருந்து சுமார் 1500க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட பெண்களின் ஆபாச வீடியோக்களை கைப்பற்றியது காவல்துறை.

ஆளுங்கட்சியின் மேல் தொடர்ந்து புகார் வைக்கப்பட்டாலும் எங்களுக்கும் இந்த விவகாரத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தொடர்ந்து மறுத்துக் கொண்டே வருகிறது ஆளுங்கட்சி தரப்பு.

இதுகுறித்து தேசிய மகளிர் ஆணையம் தலைவர் ரேகா சர்மா தமிழ்நாடு டிஜிபி டி கே  ராஜேந்திரனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு விசாரணையை துரிதப்படுத்தி விரைவில் நீதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

இதன் எதிரொலியாக, வழக்கை சிபிஐக்கு மாற்றி, விசாரணையை துரிதப்படுத்தவும் இந்த கொடுங்குற்றத்தின் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பதை அறியவும் அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு.  இதற்க்கு ஒப்புதல் அளித்தார் ஆளுநர் பன்வாரிலால்.

Published by
Vignesh

Recent Posts

லண்டன் சென்று வந்த பிறகு அண்ணாமலைக்கு என்ன ஆனது எனத் தெரியவில்லை-திருமாவளவன் பேச்சு!

சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

8 minutes ago

FIR-ஐ வெளியிட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்கவும் – தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு

சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

60 minutes ago

“எனக்கு நானே சாட்டையடி கொடுக்கப் போகிறேன்” பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆவேசம்!

சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

2 hours ago

கல்யாண வீட்டு ஸ்பெஷல்..மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?.

சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில்  பார்க்கலாம்.…

2 hours ago

புது புது முயற்சி விடாமுயற்சி! அசத்தல் அப்டேட் கொடுத்த அனிருத்!

சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல்  விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள "விடாமுற்சி" படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில…

2 hours ago

சண்டை போட்ட விராட் கோலி…அதிரடியாக அபராதம் போட்ட ஐசிசி!

மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன்…

3 hours ago