பொள்ளாச்சி பாலியல் வழக்கு : தமிழக அரசு தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

Published by
Venu

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 4 பேரின் குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 

கடந்த ஆண்டு தமிழகத்தை உலுக்கிய  சம்பவம் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை.அதாவது கடந்த 7 ஆண்டுகளாக சுமார் 200-க்கும் மேற்பட்ட பெண்களை ஆசை வார்த்தைகள் பேசி தன் வலையில் வீழ்த்தி கூட்டு வன்புணர்வு செய்தனர் .இதில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்பட்ட 4 பேர்(சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார்) கைது செய்யப்பட்டு அவர்கள் மீது குண்டர் சட்டமும் போடப்பட்டது.பின் குண்டர் சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான ஆவணங்கள் தெளிவில்லாமல் உள்ளது என்று  உயர்நீதிமன்றம் தெரிவித்தது.இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது.

எனவே இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்தது.இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், ஏற்கனவே பிறப்பித்த குண்டர் சட்ட உத்தரவு  மார்ச் 12-ஆம் தேதி முடிவடைவதால் இந்த விவகாரத்தில் லையிட விருமப்பவில்லை என்று கூறி தமிழக அரசின் மனுவை தள்ளுதுபடி செய்வதாக உத்தரவு பிறப்பித்தது.

Recent Posts

INDvENG : இந்திய மண்ணில் முதல் அரை சதம்…சாதனைகளை குவித்த ஜாஸ் பட்லர்!

INDvENG : இந்திய மண்ணில் முதல் அரை சதம்…சாதனைகளை குவித்த ஜாஸ் பட்லர்!

மகாராஷ்டிரா : இந்தியா மற்றும் இங்கிலாந்து இரண்டு அணிகளும் மோதிக்கொள்ளும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டி…

3 minutes ago

‘சட்டவிரோதமாகக் குடியேறிய ஏலியன்ஸ்’! பாதுகாப்பு படை தலைவர் போட்ட பதிவு!

அமெரிக்கா : நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியவர்களில் முதல்கட்டமாக 104 இந்தியர்கள், அமெரிக்க ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தப்பட்டதாக வெளியாகியுள்ள…

43 minutes ago

ஹர்திக் பாண்டியா பற்றிய கேள்வி…சீறி கொண்டு பதில் சொன்ன ரோஹித் சர்மா!

நாக்பூர் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஒரு…

1 hour ago

தொடர் தோல்விகளில் தவிக்கும் லைக்கா..கை கொடுத்து காப்பாற்றுமா விடாமுயற்சி?

சென்னை : விடாமுயற்சி படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், படத்தை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.…

2 hours ago

விராட் கோலிக்கு என்னாச்சி? ‘ஷாக்’கான ரசிகர்கள்!

நாக்பூர் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரை வென்ற இந்தியா அதே தெம்புடன் இன்று…

2 hours ago

சாம்பியன்ஸ் டிராபி… டிஜிட்டல் டிக்கெட்டுகளுடன் நுழைய முடியாது.! ரசிகர்ளுக்கு பாகிஸ்தான் கட்டுப்பாடு…

பாகிஸ்தான் : பாகிஸ்தானில் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் தொடங்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடருக்கான…

3 hours ago