பொள்ளாச்சி பாலியல் வழக்கு : தமிழக அரசு தொடர்ந்த வழக்கு தள்ளுபடி
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 4 பேரின் குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
கடந்த ஆண்டு தமிழகத்தை உலுக்கிய சம்பவம் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை.அதாவது கடந்த 7 ஆண்டுகளாக சுமார் 200-க்கும் மேற்பட்ட பெண்களை ஆசை வார்த்தைகள் பேசி தன் வலையில் வீழ்த்தி கூட்டு வன்புணர்வு செய்தனர் .இதில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்பட்ட 4 பேர்(சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார்) கைது செய்யப்பட்டு அவர்கள் மீது குண்டர் சட்டமும் போடப்பட்டது.பின் குண்டர் சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான ஆவணங்கள் தெளிவில்லாமல் உள்ளது என்று உயர்நீதிமன்றம் தெரிவித்தது.இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது.
எனவே இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்தது.இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், ஏற்கனவே பிறப்பித்த குண்டர் சட்ட உத்தரவு மார்ச் 12-ஆம் தேதி முடிவடைவதால் இந்த விவகாரத்தில் லையிட விருமப்பவில்லை என்று கூறி தமிழக அரசின் மனுவை தள்ளுதுபடி செய்வதாக உத்தரவு பிறப்பித்தது.