பொள்ளாச்சி பாலியல் வழக்கு – ரூ.1 கோடி இழப்பீடு கேட்ட வழக்கில் மு.க.ஸ்டாலின் பதில் அளிக்க உத்தரவு
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்புபடுத்தி பேசியதாக பொள்ளாச்சி ஜெயராமன் தொடர்ந்த வழக்கில் மு.க.ஸ்டாலின் பதில் அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு தமிழகத்தை உலுக்கிய சம்பவம் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை.அதாவது கடந்த 7 ஆண்டுகளாக சுமார் 200-க்கும் மேற்பட்ட பெண்களை ஆசை வார்த்தைகள் பேசி தன் வலையில் வீழ்த்தி கூட்டு வன்புணர்வு செய்தனர் .இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலயில் தமிழக சட்டசபை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் சென்னை உயர்நீதிமன்றத்தில்,பொள்ளாச்சி வழக்கில் தன் பெயரை இணைத்துப் பேசி நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாக திமுக தலைவர் ஸ்டாலின் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார்.மேலும் தன்னைப்பற்றி அவதூறாக இரண்டு பத்திரிக்கைகள் அவதூறான செய்திகளை வெளியிட்டது . மேலும் ஸ்டாலினுக்கு சொந்தமான தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது .எனவே மேற்கொண்டவர்கள் ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம்,திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகஸ்ட் 18ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.