பொள்ளாச்சி பாலியல் விவகாரம் : திமுகவின் கூற்று உண்மையானது- கனிமொழி

Published by
லீனா

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிமுக பிரமுகர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பதை, திமுக தொடர்ந்து சொல்லி வந்துள்ளது. திமுகவின் கூற்று உண்மையானது.

2019ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி, பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து, ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்ததாக பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு  ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிற நிலையில், முக்கிய குற்றவாளிகளான 5 பேர் சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர். இதனையடுத்து, சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், 2 ஆண்டுகளுக்கு பின் திடீர் திருப்பமாக வழக்கில் தொடர்புடைய அதிமுக பிரமுகர் உட்பட 3 பேரை கைது செய்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில், இதுகுறித்து திமுக எம்.பி. கனிமொழி தான் ட்வீட்டர் பக்கத்தில், பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிமுக பிரமுகர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பதை, திமுக தொடர்ந்து சொல்லி வந்துள்ளது. திமுகவின் கூற்று உண்மை என்பதை இன்று, மாணவர் பிரிவின் பொள்ளாச்சி நகர செயலாளரையும், மேலும் இரு அதிமுகவினரையும், சிபிஐ இவ்வழக்கில் கைது செய்து உறுதி செய்துள்ளது.

மேலும் அந்த பதிவில், எடப்பாடி அரசிடம் இவ்வழக்கு விசாரணை தொடர்ந்திருந்தால் இந்த கைதுகள் நடந்திருக்குமா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Published by
லீனா

Recent Posts

“போராட்டம் எதற்கு என்று தெரியாத கட்சி தவெக” – அண்ணாமலை விமர்சனம்.!

“போராட்டம் எதற்கு என்று தெரியாத கட்சி தவெக” – அண்ணாமலை விமர்சனம்.!

சென்னை : டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று நள்ளிரவு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை…

9 minutes ago

“விஜய் இந்துக்களுக்கு பச்சை துரோகம் செய்கிறார்!” எச்.ராஜா பரபரப்பு குற்றசாட்டு!

திருச்சி : டெல்லி பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு வக்பு சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவின்படி, தற்போதுள்ள…

18 minutes ago

“கச்சத்தீவு கைவிட்டுப்போக காரணமே திமுகதான்”- தவெக தலைவர் விஜய்.!

சென்னை : இலங்கை அதிபர் அநுரகுமார திஸாநாயக்கவின் அழைப்பின் பேரில், பிரதமர் மோடி இன்று இலங்கைக்கு அரசுமுறை பயணம் மேற்கொள்கிறார்.…

34 minutes ago

ஐஸ்கிரீம், குக்கீஸ் தயாரிப்பதா ஸ்டார்ட்அப் பிசினெஸ்? மத்திய அமைச்சர் கடும் தாக்கு!

டெல்லி : நேற்று (ஏப்ரல் 3) டெல்லியில் ஸ்டார்ட் அப் மகா கும்பமேளா 2025 நிகழ்வு நடைபெற்றது. இதில், மத்திய…

1 hour ago

இனி யாரும் நெருங்க முடியாது! விஜய்க்கு ”Y” பிரிவு பாதுகாப்பு அமல்..!

சென்னை :நடிகரும் தமிழக வெற்றிக் கழக (TVK) தலைவருமான விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு, அது தற்போது அமலுக்கு…

2 hours ago

சர்வதேச விண்வெளி மையத்துக்கு செல்ல தயாராகும் இரண்டாவது இந்தியர்.! யார் இந்த சுபான்ஷு சுக்லா?

டெல்லி : இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) ககன்யான் பணிக்கான 'முதன்மை' விண்வெளி வீரராக சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட குரூப்…

3 hours ago