பொள்ளாச்சி சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் மீது குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களாக தமிழகத்தை உலுக்கிய சம்பவம் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை.அதாவது கடந்த 7 ஆண்டுகளாக சுமார் 200-க்கும் மேற்பட்ட பெண்களை ஆசை வார்த்தைகள் பேசி தன் வலையில் வீழ்த்தி கூட்டு வன்புணர்வு செய்தனர் .
இதில் குற்றவாளிகளாக கருதப்பட்டவர்கள் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது. இதில் கைதான சபரிராஜன், திருநாவுக்கரசு ஆகியோர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான ஆவணங்கள் தெளிவில்லாமல் உள்ளது என்று உயர்நீதிமன்றம் தெரிவித்தது.
இந்த நிலையில் இது குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அவரது அறிக்கையில்,பொள்ளாச்சி வழக்கில் திருநாவுக்கரசு, சபரிராஜனை குண்டர் சட்டத்தில் அடைக்கும் போது, கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகளை அதிமுக அரசின் மறைமுகக் கட்டளைப்படி காவல்துறை கடைப்பிடிக்கவில்லை. குண்டர் சட்டம் ரத்தாக அதிமுக அரசு துணை போயிருப்பது வெட்கக்கேடானது என்று தெரிவித்துள்ளார்.
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…
திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…
மதுரை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதிலும்…
சென்னை : இன்று பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுதுவம் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய தினங்கள்…
சென்னை :கரும்புச்சாறை வைத்து பொங்கல் ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்: பச்சரிசி…
சென்னை: துபாயில் நடைபெற்ற வரும் 24 மணி நேர கார் பந்தயத்தில் 922 போர்ஷே கார் பிரிவில், நடிகர் அஜித்குமாரின்…