பொள்ளாச்சி விவாகாரம்…! தமிழக அரசு வழக்கை சிபிஐ க்கு மாற்ற முடிவு….!!!
பொள்ளாச்சியில் கடந்த சில வருடங்களாக பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் இளம் பெண்களை மயக்கி, வர்களை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளது ஒரு கும்பல்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக, இவர்களால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் 4 பேரை புகாரின் அடிப்படையில் கைது செய்துள்ளனர்.
அரசியல் காட்சிகள் மற்றும் பல்வேறு தரப்பினரிடம் இருந்து கோரிக்கை எழுந்த நிலையில், தமிழக டிஜிபி ராஜேந்திரன் இந்த வழக்கை சிபிசிஐடி க்கு மாற்றி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்நிலையில், பொள்ளாச்சி பாலியல் வழக்கை சிபிஐ க்கு மற்ற முடிவு செய்துள்ளதாக டிஜிபி அலுவலகம் மற்றும் தமிழக அரசு சார்பில் தகவல்கள் வெளியாகியுள்ளது..