பொள்ளாச்சி கொடூரம் ! அதிமுக முக்கிய புள்ளிகளை கைதுசெய்ய வலியுறுத்தி மாபெரும் ஆர்ப்பாட்டம்

Default Image

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில், அதிமுக முக்கிய புள்ளிகளை கைதுசெய்ய வலியுறுத்தி, திமுக மகளிரணி செயலாளர்   கனிமொழி  தலைமையில் வருகின்ற 10ஆம் தேதி அன்று பொள்ளாச்சியில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கீழ்மட்ட அ.தி.மு.க. நிர்வாகியுடன் பெண்ணினத்தைச் சீர்குலைத்த இந்த வழக்கை முடித்து வைத்து விடாமல் – இக்குற்றத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க.வின் முக்கியப் புள்ளிகளையும் – மேலும் யாருக்கும் தெரியாமல் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் அ.தி.மு.க.வின் முன்னணிப் புள்ளிகளையும் உடனடியாகக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி, திராவிட முன்னேற்றக் கழக மகளிரணி மாநிலச் செயலாளர் திருமதி. கனிமொழி எம்.பி., அவர்கள் தலைமையில் 10.01.2021 அன்று காலை 10 மணிக்கு பொள்ளாச்சியில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

பாலியல் வன்கொடுமைக்குக் காரணமான அ.தி.மு.க.வின் முக்கியப் புள்ளிகள் கைது செய்யப்பட்டு – சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, தண்டிக்கப்படும் வரை திராவிட முன்னேற்றக் கழகத்தின் நியாயம் கேட்கும் போராட்டம் ஓயாது – தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்