இந்தியா முழுவதும் ஆன்மீகப்பணியில் ஈடுபடும் பிரம்ம குமாரிகள் என்ற இயக்கத்தின் தலைமை நிர்வாகி ராஜௌஓகினி தாதா ஜானகி அவர்கள் முக்தி அடைந்துள்ளார். இவருக்கு நமது பாரத பிரதமர் மோடி அவர்கள் மற்றும் தமிழ்நாடு முதல்வர் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஆகியோர் தற்போது இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்த பிரம்ம குமாரிகள் அமைப்பின் தாய் ராஜயோகினி தாதி ஜானகி அவர்கள் கடந்த 1916ஆம் ஆண்டு இந்தியாவின் வடக்கு மாகாணமான தற்போதைய பாகிஸ்தானில் உள்ள சிந்து பகுதியில் பிறந்தார்.பின், இவர் 1937-ம் ஆண்டு பிரம்ம குமாரிகள் என்ற இயக்கத்தில் சேர்ந்த இவர், 1970ஆம் ஆண்டு இங்கிலாந்தின் லண்டன் சென்று ஆன்மிக, கல்வி மற்றும் சமூக பணியாற்றினார். தற்போது, உலகம் முழுவதும் 147 நாடுகளில் இந்த பிரம்ம குமாரிகள் இயக்கத்திற்க்கு 5,400 கிளைகள் செயல்பட்டு வருகின்றன.
இந்த ஆன்மீக இயக்கத்தின் தலைமை நிர்வாகியாக செயல்பட்டு வந்தவர் 104 வயதை கடந்த ராஜயோகினி தாதி ஜானகி அம்மாள். இந்நிலையில், இவர் வயது முதிர்வின் காரணமாக ராஜஸ்தான் மாநிலம் அபுமலையில் உள்ள மருத்துவமனையில் நேற்று அதிகாலை 2 மணியளவில் முக்தியடைந்தார். அன்று மாலை 3 மணியளவில் ராஜஸ்தான் மாநிலம் அபுமலையில் உள்ள அந்த இயக்கத்தின் உலகளாவிய தலைமையகத்தில் அவரது இறுதி சடங்குகள் நடைபெற்றது. இந்நிலையில் அவரது மறைவுக்கு நமது பாரத பிரதமர் மற்றும் தமிழக முதல்வர் அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
பிரம்மா குமாரிகள் இயக்கத்தின் தலைமை நிர்வாகி ராஜயோகினி தாதி ஜானகி அம்மாள் அவர்கள் சமுதாயத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் அக்கறையுடன் சேவை புரிந்தார். மக்களிடம் ஆக்கப்பூர்வ மாற்றங்களைக் கொண்டு வர கடுமையாக உழைத்தார். பெண்களை சக்தி வாய்ந்தவர்களாக ஆக்குவதில் அவரது முயற்சி குறிப்பிடத்தக்கது. ஓம் சாந்தி. என்று , பிரதமர் தனது டுவிட்டர் பதிவில் கூறியுள்ளார்.
இதேபோல் தமிழக முதல்வர் வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:
உலகம் முழுவதும் பல்வேறு பயணம் மேற்கொண்டு சாதி, சமய, இன வேறுபாடின்றி தியானத்தின் மூலம் அமைதி மற்றும் நற்பண்புகளுடன் வாழும் ஆன்மிக வழியை புகட்டியவர் என்றும், மக்களிடையே ஆக்கப்பூர்வமான மாற்றங்களை கொண்டு வர கடுமையாக உழைத்தவர் என்றும், பெண்களை சக்தி வாய்ந்தவராக ஆக்குவதில் இவருடைய உழைப்பும் முயற்சியும் குறிப்பிடத்தக்கது என்று தமிழக முதல்வர் கூறியுள்ளார்.
பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …
ஜெர்மனி : உலகப் புகழ் பெற்ற செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சன் ஜெர்மனியில் உள்ள வைஸ்ஸென்ஹாஸில் நடைபெறும் பிளைண்ட்ஃபோல்டு ஃப்ரீஸ்டைல்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி…