அரசியல் மக்களுக்கானது… அதை யார் வேண்டுமானாலும் பேசலாம் – தமிழிசை

Default Image

ஆளுநரை யார் வேண்டுமானாலும் சந்திக்கலாம் உரிமை உள்ளது என தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி. 

கடந்த சில நாட்களுக்கு முன்பதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சந்தித்து பேசினார். ஆளுநரை சந்தித்த பின் பேட்டியளித்த ரஜினிகாந்த், ஆளுநரிடம் அரசியல் பேசியதாகவும், ஆனால் அதுபற்றி தற்போது பேச இயலாது என்றும் தெரிவித்திருந்தார்.

ரஜினிகாந்தின் பேச்சிற்கு கண்டனங்கள் எழுந்த நிலையில், சென்னை ஆளுநர் மாளிகையில், ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் கலந்து கொண்ட பின் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அப்போது பேசிய அவர், நடிகர் ரஜினி,ஆளுநரை சந்தித்தை அரசியலாக்குகிறார்கள்; அரசியல் மக்களுக்கானது,அதை யார் வேண்டுமானாலும் பேசலாம். அதே வேளையில் அவர் கட்சி அரசியல் தான் பேசியிருக்க வேண்டும் என்பதல்ல, கலை அரசியலும் பேசியிருக்கலாம்; ஆளுநரை யார் வேண்டுமானாலும் சந்திக்கலாம் உரிமை உள்ளது. அரசியல் நம் சமூகத்தில் தவிர்க்க முடியாதது என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்