எளிமையில் இருந்து உயர்வுக்குச் செல்லலாம் என்று காட்டிய அரசியலாளர் – கமலஹாசன்
எழுத்தே முதலென முரசறைந்த கலைஞரை பிறந்தநாளில் நினைவு கூர்வோம் என கமலஹாசன் ட்வீட்.
முன்னாள் முதல்வரும்,முன்னாள் திமுக தலைவருமான கருணாநிதி அவர்களின் 99-வது பிறந்த நாள் விழா இன்று அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாப்களின் அவர்கள் கோபாலபுர இல்லத்தில் கலைஞர் கருணாநிதி உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார்.
அதனை தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரையில், கலைஞரின் நினைவிடத்திற்கு மரியாதை செலுத்தினார். இந்த நிலையில், மநீம கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில், ‘எளிமையில் இருந்து உயர்வுக்குச் செல்லலாம் என்று காட்டிய அரசியலாளர்; ஒடுக்கப்பட்டோருக்காகவே ஒலிக்கும் குரலென இருந்த சமூகநீதித் தலைவர்; நாடக, திரைக் கலைகளின் மூலம் மொழி வளர்த்த தமிழாளர்; எழுத்தே முதலென முரசறைந்த கலைஞரை பிறந்தநாளில் நினைவு கூர்வோம்.’ என பதிவிட்டுள்ளார்.
எளிமையில் இருந்து உயர்வுக்குச் செல்லலாம் என்று காட்டிய அரசியலாளர்; ஒடுக்கப்பட்டோருக்காகவே ஒலிக்கும் குரலென இருந்த சமூகநீதித் தலைவர்; நாடக, திரைக் கலைகளின் மூலம் மொழி வளர்த்த தமிழாளர்; எழுத்தே முதலென முரசறைந்த கலைஞரை பிறந்தநாளில் நினைவு கூர்வோம்.
— Kamal Haasan (@ikamalhaasan) June 3, 2022