நாளை முதல் அரசியல், மத, கலாசார பொழுதுபோக்கு கூட்டங்களை நடத்தலாம்

நாளை முதல் திறந்தவெளியில் அரசியல், மத, கலாசார பொழுதுபோக்கு கூட்டங்களை நடத்தலாம் என அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அளித்தது. அதன்படி, சுற்றுலா தளங்கள் மற்றும் கடற்கரை போன்றவைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் இதுவரை திறந்தவெளியில் அரசியல், மத கூட்டங்கள் நடத்த அனுமதி இல்லை. அதேசமயம் அரங்குகளில் அரசியல், மத கூட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
கொரோனா ஊரடங்கில் மேலும் கூடுதல் தளர்வுகள் அளித்து,அண்மையில் தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டார். அதில், டிசம்பர் 19-ஆம் தேதி முதல் திறந்தவெளியில் அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, மதம்சார்ந்த கூட்டங்களை நடத்தலாம் என அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தனிமனித இடைவெளியை பின்பற்றி 50% பங்கேற்பாளர்களுடன் கூட்டங்களை நடத்திக் கொள்ளலாம். அதேசமயம் மாவட்டங்களில் ஆட்சியர்களிடமும், சென்னையில் மாநகர காவல் ஆணையரிடமும் அனுமதி பெறுவது அவசியம் என தெரிவிக்கப்பட்டது.மேலும் தமிழகத்தில் திறந்த வெளிகளில் கூட்டங்கள் நடத்துவதற்கு அனுமதியளித்ததற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
எனக்கு அன்னைக்கே தெரியும்..சிவகார்த்திகேயன் வளர்ச்சி குறித்து ஷாம் என்ன சொன்னார் தெரியுமா?
February 25, 2025
ரொம்ப மோசமான பார்ம்…இந்தியாவின் B டீமை கூட பாகிஸ்தான் தொட முடியாது..சுனில் கவாஸ்கர் பேச்சு!
February 25, 2025
இந்தி எது ஆங்கிலம் எது ? விமர்சனம் செய்த அண்ணாமலை!
February 25, 2025