தமிழகத்தில் 22 கட்சிகள் செயல்படாதவை… தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு.!
நடிகர் டி.ராஜேந்தர் நடத்தி வரும் லட்சிய திமுக உட்பட தமிழகத்தில் 22 கட்சிகள் செயல்படாதவையாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்திய தேர்தல் ஆணையம் அண்மையில் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, இந்தியாவில் 5 ஆண்டுகளுக்கு மேலாக எந்த தேர்தலிலும் போட்டியிடாமல் இருக்கும் கட்சிகள் லிஸ்ட்டை தெரிவித்துள்ளது.
அதன் படி , இந்தியாவில் மொத்தமாக 253 கட்சிகள் செயல்படாதவையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் 22 காட்சிகள் தமிழகத்தை சேர்ந்தவையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டி.ராஜேந்தர் நடத்தி வரும் லட்சிய திமுக உட்பட 22 காட்சிகள் செயல்படாத கட்சிகள் என வரையறுக்கப்பட்டுள்ளன. அதில் 7 கட்சிகளின் அங்கீகாரத்தை இந்திய தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது.