அன்னையர் தின வாழ்த்துகள் தெரிவித்த அரசியல் தலைவர்கள்.!

mk stalin - edappadi palanisamy - annamalai

MothersDay2024 : ஆண்டுதோறும் மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை இன்று (மே 12) அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. இன்றைய நந்நாளில் பலர் தங்களது அம்மாவிற்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழக அரசியல் தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களை எக்ஸ் வலைத்தளம் வாயிலாக தெரிவித்துள்னர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அன்னையர் தினத்தை முன்னிட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரின் வாழ்த்துக் குறிப்பில், “உயிராக உருவான நம்மை தன் வயிற்றுக்குள் சுமந்து, வாழ்நாளெல்லாம் பாசத்தோடு அரவணைக்கும் அன்பின் திருவுரு அம்மா. தூய்மையான அன்பை மாரியெனப் பொழியும் தாய்மார்கள் அனைவருக்கும் அன்னையர் நாள் வாழ்த்துக்கள். ஈன்றவள் நம்மைச் சான்றோன் எனக் கேட்க வாழ்ந்து அன்னையரைப் போற்றுவோம்” என குறிப்பிட்டுள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி

அன்னையர் தினத்தை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரின் வாழ்த்துக் குறிப்பில், “பூமி தாங்கும் முன்பே, நம்மையெல்லாம் பூவாய் தாங்கியதோடு, ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும், அன்பின் முழு வடிவமான அன்னையர் அனைவருக்கும் எனது இதயமார்ந்த ‘அன்னையர் தின’ நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை

அன்னையர் தினத்தை முன்னிட்டு, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரின் வாழ்த்துக் குறிப்பில், ” ஒவ்வொரு நாளும் குடும்பத்திற்காகவும் குழந்தைகளுக்காகவும் ஓயாமல் உழைத்து, அனைவரையும் இணைக்கும் மையப்புள்ளியாகத் திகழும் தாய்மார்களின் கடின உழைப்பும், தியாகங்களும் போற்றுதலுக்குரியது. நம் ஒவ்வொருவர் வாழ்விலும் தாய்மார்கள் வகிக்கும் முக்கியப் பங்கிற்கு நன்றி செலுத்துவோம். இனிய அன்னையர் தின வாழ்த்துகள்” என குறிப்பிட்டுள்ளார்.

தவெக தலைவர் விஜய்

அன்னையர் தினத்தை முன்னிட்டு நடிகரும், தவெக தலைவருமான விஜய் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரின் வாழ்த்துக் குறிப்பில், “அன்பின் முழு உருவமாய் திகழ்ந்து, குழந்தைகளுக்காகவும், குடும்பத்திற்காகவும் தம் வாழ்நாளையே தியாகம் செய்யும் தாய்மார்களுக்கு என் அன்னையர் தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னையரை இன்று மட்டுமல்ல, எந்நாளும் போற்றி வணங்குவோம்” என உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்