ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி …!வைகோ உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கைது…!
ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி சென்ற வைகோ கைது செய்யப்பட்டுள்ளார்.
பஸ் எரிப்பு வழக்கில் மூன்று அப்பாவி மாணவிகள் சாவுக்கு காரணமான கொலை குற்றவாளிகளை விடுதலை செய்யும் ஆளுநர் எந்த தவறு செய்யாத 7 அப்பாவிகளை விடுதலை செய்ய மறுப்பது ஏன் ? என்பதை கண்டித்து இன்று போராட்டம் நடைபெறுகிறது .இந்த போராட்டத்தை மதிமுக மற்றும் திராவிடர் கழகம் நடத்துகிறது.
இன்று பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்கக்கோரி ஆளுநர் மாளிகை அருகே சின்னமலை பகுதியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் வைகோவுடன் முத்தரசன், திருமாவளவன், வேல்முருகன், டி.கே.எஸ் இளங்கோவன் பங்கேற்றனர்.
இந்நிலையில் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி சென்றதால் வைகோவுடன் முத்தரசன், திருமாவளவன், வேல்முருகன், டி.கே.எஸ் இளங்கோவன் கைது செய்யப்பட்டுள்ளனர்.