விஜயின் அரசியல் பயணம்., த.வெ.க மாநாடு! தலைவர்களின் கருத்துக்கள் என்ன.?

Published by
மணிகண்டன்

சென்னை : த.வெ.க தலைவர் விஜய்யின் அரசியல் பயணம் குறித்த கருத்துக்கள் மற்றும் அறிவுரைகளை தமிழக அரசியல் தலைவர்கள் கனிமொழி ,  சீமான் உள்ளிட்டோர் தெரிவித்துள்ளனர்.

தமிழ் சினிமாவின் உச்ச நடச்சத்திரமாக விளங்கும் நடிகர் விஜய்,  தனது ரசிகர் மன்றங்களை மக்கள் இயக்கமாக மாற்றி பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வந்தார். அதன் பிறகு அண்மையில்,  மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக அறிவித்து தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்தார் நடிகர் விஜய்.

தமிழக வெற்றிக் கழக கட்சி சார்பாக இன்னும் அதிகாரப்பூர்வ அரசியல் மாநாடு எதுவும் நடைபெறவில்லை. நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பே கட்சி தொடங்கப்பட்டாலும் ,  த.வெ.க கட்சியின் இலக்கு 2026 தமிழக சட்டமன்ற தேர்தல் என அக்கட்சி தலைவர் விஜய் திட்டவட்டமாக அறிவித்து அதனை நோக்கிய தனது அரசியல் பயணத்தை நகர்த்தி வருகிறார்.

இப்படியான சூழலில் விஜயின் அரசியல் பிரவேசம் குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் கருத்துக்களையும் அறிவுரைகளையும் அண்மையில் அளித்துள்ளனர்.

திமுக எம்.பி கனிமொழி :

திமுக எம்.பி கனிமொழி அண்மையில் ஒரு தனியார் நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டிருக்கையில், நடிகர் விஜயின் அரசியல் பயணம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த திமுக எம்பி கனிமொழி, விஜய்யின் குடும்பத்தினரை, சிறுவயதில் இருந்தே எனக்கு தெரியும். அப்போதிருந்து விஜய்யின் சினிமா வளர்ச்சியை பார்த்து வருகிறேன். எப்படி சினிமாவில் தனக்கான உழைப்பு, பாதையில் தெளிவாக பயணித்தாரோ, அதேபோல உழைப்பு, அதற்கான சரியான பாதையில் அரசியலிலும் பயணிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்று தனது அறிவுரையை திமுக எம்.பி கூறியுள்ளார்.

நா.த.க தலைவர் சீமான் :

அதேபோல, நேற்று, நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் சென்னையில் சி.பா.ஆதித்தானரின் மூத்த மகன் மறைந்த ராமச்சந்திரா ஆதித்தனாரின் 90ஆவது பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு திரும்புகையில், அவரிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை கேட்டனர்.

அப்போது விஜயின் அரசியல் பயணம், அவரது கட்சி மாநாடு குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த சீமான், தமிழ்நாட்டில் மாநாடு நடத்துவதற்கு திருச்சி, மதுரை என எங்கும் இடமே இல்லை. நாங்கள் (நாம் தமிழர்) வேறு வழியின்றி தனியார் இடத்தில் நடத்தினோம். காடுகளாக இருந்த இடத்தை சுத்தம் செய்து நடத்தினோம்.

ஆனால், தற்போதைய நிலையில் தனியார் நிலமும் எளிதாக கிடைத்து விடாது. நில உரிமையாளரை மிரட்டுவார்கள். இதுபோன்ற பல நெருக்கடிகளை நான் அனுபவித்தேன். என் தம்பி விஜயும் அனுபவிப்பார் என நாம் தமிழர் கட்சி சீமான் கூறினார்.

அமைச்சர் தா.மோ.அன்பரசன் :

முன்னதாக கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி திமுக இளைஞரணி சேர்ப்பு முகாம் நிகழ்வில் பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசன், தங்களை பார்க்க கூட்டம் கூடினால் நாமும் முதலமைச்சர் ஆகிவிடலாம் என நினைத்துக்கொண்டு நடிகர்கள் அரசியலுக்கு வருகிறார்கள். அவர்களுக்கு அரசியல் அறிவு இருக்காது. நடிகர்களாக வந்து அரசியலில் சாதித்தது எம்ஜிஆர், ஜெயலலிதா மட்டும் தான். அது அவர்களோடு நின்றுவிட்டது. அதற்கு பிறகு நடிகர்கள் யாரும் அரசியலில் சாதிக்க முடியவில்லை. இனிமேல் நடிகர்கள் அரசியலுக்கு வந்தால் அவர்களது கனவு பலிக்காது என்று நடிகர் விஜயின் அரசியல் வருகையை மறைமுகமாக சாடி தனது விமர்சனத்தை முன்வைத்தார் அமைச்சர் தா.மோ.அன்பரசன்.

Published by
மணிகண்டன்

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

14 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

14 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

14 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

15 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

15 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

15 hours ago