கலைத்துறையில் அரசியல் தலையீடு முறையற்றது – சரத்குமார்
கலைத்துறையில் அரசியல் தலையீடு முறையற்றது என சரத்குமார் தெரிவித்துள்ளார்.
பிரபல கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்தில், முரளிதரனின் கதாப்பாத்திரத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிக்கிறார். இப்படத்திற்கு ‘800’ என பெயரிடப்பட்டுள்ள நிலையில், இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியான நிலையில், அந்த போஸ்டரில் முரளிதரன் தோற்றத்தில் நடிகர் விஜய் சேதுபதி இருப்பது போல் வெளியானது.
இந்நிலையில், இலங்கை அரசின் இனப்படுகொலைக்கு ஆதரவாக இருந்ததாக கூறி, விஜய் சேதுபதி இந்த படத்தில் நடிப்பதற்கு எதிர்ப்புகள் எழுந்த வண்ணம் உள்ளது. எதிர்ப்புகள் எழுந்தாலும், விஐய் சேதுபதிக்கு சிலர் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் அவர்கள் இதுகுறித்து கூறுக்கையில், ‘கலைத்துறையில் ஊக்கத்தை தடுக்கின்ற முயற்சி ஏற்புடையதல்ல என்றும், சாதாரண மனிதன் பல போராட்டத்திற்கு பின், எப்படி உச்சநிலையை அடைந்தான் என்பதை சித்தரிக்கும் கதையை வரவேற்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், ‘இந்த விவகாரத்தில், அரசியல் ரீதியாக தலையிட்டு எதிர்ப்பது முறையற்றது என்றும், இந்த கதாப்பாத்திரத்தில் தான் நடிக்க வேண்டும் என எதிர்ப்பு தெரிவித்தால், கலைத்துறை சுதந்திரத்துடன் செயல்பட முடியாத நிலை ஏற்படும்.’ என தெரிவித்துள்ளார்.