ஜனவரியில் அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்த நடிகர் ரஜினிக்கு, மு.க.அழகிரி தொலைப்பேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினி எப்போது அரசியலுக்கு வருவார், எப்போது கட்சி தொடங்குவர் என்ற பல கேள்விகளுக்கு தற்போது விடை கிடைத்துள்ளது. அதாவது, சமீபத்தில் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, நீங்கள் எந்த முடிவு எடுத்தாலும் நாங்கள் உங்க கூட இருப்போம் என நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர் என்றும் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில் என்னுடைய முடிவை தெரிவிக்கிறேன் எனவும் தெரிவித்திருந்தார்.
இதுபோன்று தொடர்ந்து, நான் அரசியலுக்கு விரைவில் வருவேன் என ரஜினிகாந்த் அறிவித்துக்கொண்டே வந்த நிலையில், இன்று ரஜினிகாந்த் தான் அரசியலுக்கு வருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அவர் அறிவிப்பில், வரப்போகிற சட்டமன்ற தேர்தலில் மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற ஜாதி மதச் சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாக்குவது நிச்சயம். அற்புதம்.. அதிசயம்… நிகழும் என தெரிவித்துள்ளார்.
ரஜினி ஆரமிக்கும் கட்சிக்கு அர்ஜூன மூர்த்தியை தலைமை ஒருங்கிணைப்பாளராகவும், மேற்பார்வையாளராக தமிழருவி மணியணை நியமித்துள்ளார். அதிகாரப்பூர்வமாக அறிவித்ததை தொடர்ந்து ரசிகர்கள் பல்வேறு இடங்களில் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். ரஜினியின் அறிவிப்பை அடுத்து அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் ரஜினிக்கு, மு.க.அழகிரி தொலைப்பேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பஹல்காம் : நேற்று ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல்…
பஹல்காம் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளை பிடிக்க ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். ட்ரோன்கள், மோப்ப நாய்கள் உதவியுடன்…
பஹல்காம் : ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் சம்பவம்…
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் ஏப்ரல் 22 மாலை நடந்த பயங்கரவாத தாக்குதலில்…
நாட்டையே உலுக்கிய ஜம்மு-காஷ்மீர் பாஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கர பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஒரு நாள் கழித்து, பாகிஸ்தான்…