விரைவில் அரசியல் மாற்றம்! கையெழுத்து போட மாட்டேன் என்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள் – முதலமைச்சர்

Published by
பாலா கலியமூர்த்தி

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், நேற்று முன்தினம் ’எண்ணித் துணிக’ என்ற தலைப்பில், நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோருடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடினார். அப்போது பேசிய ஆளுநர், நீட் தேர்வுக்கு தடை கோருவதை ஒருபோதும் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து கையெழுத்திடமாட்டேன். இந்த விவகாரம் பொதுப் பட்டியலில் இருப்பதால், குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றார்.

நீட் தேர்வைப் பொறுத்தவரை, பயிற்சி மையங்களுக்குச் சென்றுதான், அதில் வெற்றிபெற வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. பள்ளியில் படிக்கும்போதே, ஆழமாக கவனித்துப் படித்தால் நீட் தேர்வில் வெற்றி பெறலாம் எனவும் மாணவர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தார். நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து கையெழுத்திடமாட்டேன் ஆளுநர் பேச்சுக்கு அரசியல் தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்த சமயத்தில், சென்னை குரோம்பேட்டையில் நீட் தேர்வால் மாணவன் நேற்று தற்கொலை செய்துகொண்ட நிலையில் இன்று தந்தையும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

நேற்று மகனின் இறுதி சடங்கு முடிந்த நிலையில் ஜெகதீஸ்வரனின் தந்தை செல்வசேகர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ண்டார். இந்த சம்பவம் தமிழக்தில் சோகத்தையும், அதிருச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், நீட் தேர்வால் மாணவன், தந்தை உயிரிழந்த நிலையில், முதலமைச்சர் முக ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மாணவன் ஜெகதீஸ்வரன், அவரது தந்தை செல்வசேகர் ஆகிய இருவரது மரணமே, நீட் பலிபீடத்தின் இறுதி மரணமாக இருக்கட்டும். மாணவ கண்மணிகளே, தன்னம்பிக்கை கொள்ளுங்கள்.

உயிரை மாய்த்து கொள்ளும் சிந்தனை வேண்டாம் என்று மீண்டும் மீண்டும் உங்களை மன்றாடி கேட்டுக்கொள்கிறேன் என்றுள்ளார். மேலும், முதலமைச்சரின் இந்த அறிக்கையில் ஆளுநர் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலும் இடம்பெற்றுள்ளது. அதாவது, நீட் தேர்வு குறித்து ஆளுநரிடம் சேலம் மாணவி ஒருவரின் தந்தை கேள்வி கேட்டதற்கு, அவரால் பதிலளிக்க முடியவில்லை, நீட் விலக்கு மசோதாவுக்கு மையெழுத்திட மாட்டேன் என ஆளுநர் சொல்லி இருப்பது அவரது அறியாமை என தெரிகிறது.

அவரது கையெழுத்திக்காக இந்த மசோதா காத்திருக்கவில்லை, இந்த சட்டத்தை பொறுத்தவரை அவருக்கு எந்த அதிகாரமும் இல்லை, ஏதோ அதிகாரம் இருப்பதை போல் அவர் காற்றில் கம்பு சுற்றிகொண்டியிருக்கிறார். ஜெகதீஸ்வரன் போன்ற எத்தனை உயிர்கள் பலியானாலும், ஆளுநர் ஆர்என் ரவி போன்றவர்களின் இதயம் கரைய போவதில்லை. இப்படிப்பட்ட கல்மனசுக்காரர்களின் காலத்தில் மனித உயிர்களுக்கு மதிப்பில்லை.

எனவே, இன்னும் சில மாதங்களில் நாங்கள் ஏற்படுத்த நினைக்கும் அரசியல் மாற்றம் நடக்கும்போது, நீட் தடுப்பு சுவர் பொலபொலவென உதிர்ந்து விழும். கையெழுத்துபோடமாட்டேன் என்பவர்கள் எல்லாம் காணாமல் போய்விடுவார்கள் என்றுள்ளார். மேலும், மாணவன் ஜெகதீஸ்வரன், அவரது தந்தை செல்வசேகர் ஆகிய இருவரது மறைவிற்கு எனது ஆழமான அஞ்சலியை தெரிவித்துக்கொள்கிறேன் எனவும் முதலமைச்சர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

பாலியல் வன்கொடுமை வழக்கு : கைதான ஞானசேகரனுக்கு மாவு கட்டு., நீதிமன்ற காவல்!

சென்னை : சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு…

9 minutes ago

சென்னை, காஞ்சிபுரம் 10 மணி வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…

11 hours ago

தமிழகத்தில் வியாழன் கிழமை (26/12/2024) இங்கெல்லாம் மின்தடை!

கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…

11 hours ago

வந்தாச்சு விடாமுயற்சி அப்டேட்! முதல் பாடல் இந்த தேதியில் தான் வெளியீடு!

சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…

12 hours ago

நான் தான் நம்பர் 1! டெஸ்ட் தரவரிசையில் அஸ்வின் சாதனையை சமன் செய்த பும்ரா!

சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…

12 hours ago

பாலியல் வன்கொடுமை – த.வெ.க தலைவர் விஜய் கடும் கண்டனம்!

சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…

12 hours ago