ஜனவரி 31ஆம் தேதி தமிழகம் முழுவதிலும் 43 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மையங்களில் 5 வயதுககுட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும் என தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
வருடத்திற்கு இரண்டு முறை போலியோ சொட்டு மருந்து தமிழகம் முழுவதிலும் வழங்கப்படுகிறது. இந்த போலியோ சொட்டு மருந்து, இளம்பிள்ளை வாதம் வராமல் பாதுகாப்பதற்காக குழந்தைகளுக்கு போடப்பபடுகிறது. இந்நிலையில் ஜனவரி 17-ஆம் தேதி போடப்பட இருந்த போலியோ சொட்டு மருந்து கொரோனா வைரஸ் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தற்போது நாளை மறுநாள் தமிழகத்தில் 43 ஆயிரத்து 57 மையங்களில் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை மறுநாள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் விமான நிலையங்களிலும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த பணிக்காக 2 லட்சத்துக்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் கட்டாயம் போலியோ சொட்டு மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். குழந்தைகளை அழைத்து வரக் கூடிய பெற்றோர்கள் கட்டுப்பாட்டு விதிகளை பின்பற்றி அழைத்துவர வேண்டும் எனவும், மொத்தம்70.50 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலை தடுப்பதற்காகவும் தமிழக அரசால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், கொரோனா அறிகுறி உள்ள குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடுவதை தவிர்க்க வேண்டும். கொரோனாவில் இருந்து மீண்ட குழந்தைகள் போலியோ சொட்டு மருந்து போட்டுக் கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ‘ யார் அந்த தியாகி?’…
சென்னை : பாஜக மாநிலத் தலைவர் பொறுப்பில் உள்ள அண்ணாமலை இன்னும் ஒருசில தினங்களில் மாற்றப்படுகிறார். அவருக்கு பதிலாக புதிய…
சென்னை : வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் எரிவாயு (கியாஸ்) சிலிண்டரின் விலையை மத்திய அரசு ரூ.50 உயர்த்தியுள்ளது. அதாவது, இதுவரை…
மும்பை : இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே…
டெல்லி : மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை உயர்த்தியுள்ளது என்ற செய்தி தலைப்பு செய்தியாக…