போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம் ஒத்திவைப்பு-அமைச்சர் விஜயபாஸ்கர்
போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், பிப்ரவரி 3-ஆம் தேதி நடக்கவிருந்த போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.மத்திய அரசின் தடுப்பு மருந்து தொழில்நுட்ப குழு இதுவரை தேதியை அறிவிக்காததால் தள்ளிவைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.