இன்றைய முகாமை பயன்படுத்தி உங்கள் குழந்தையின் உயிர் காக்க உடனே போடுங்கள் போலியோ சொட்டுமருந்து…
- இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்.
- 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் கட்டாயம் சொட்டு மருந்து அளிக்க வேண்டும்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் பிறக்கும் பச்சிளம் குழந்தையை இரக்கமின்றி தாக்கும் நோயாக பார்க்கப்பட்ட நோய் இளம்பிள்ளைவாதம் ஆகும். இந்த நோய் போலியோ எனும் வைரஸ் நுண்ணுயிரியால் தோன்றுகிறது. இந்த நோயை அரசு ஒழிக்க சொட்டுமருந்து முகாமை ஏற்படுத்தி கட்டுப்படுத்தி வருகிறது.
இந்தநிலையை தக்க வைக்க தமிழகம் முழுவதும் இன்று 19ம் தேதி நடைபெறவுள்ள போலியோ முகாம்கள் மூலம் தமிழகம் முழுவதும் மொத்தம் 72 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்க்களான பேருந்து நிலையம், ரயில் நிலையம், அங்கன்வாடி மையம், துனை சுகாதார மையம், பள்ளிகளில், அரசு மருத்துமனை என 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலியோ முகாம்களை சுகாதாரத்துறை அமைத்துள்ளது. இந்த போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்ந்து நடைபெறுகிறது.
பெற்றோர்களுக்கு ஒருவேளை, தவிர்க்க முடியாத காரணங்களால் போலியோ சொட்டு மருந்தை குழந்தைக்கு கொடுக்க முடியவில்லை என்றால், அடுத்தடுத்த நாட்களில், உங்கள் வீடுகளுக்கே களப் பணியாளர்கள் நேரில் சென்று சொட்டு மருந்து கொடுப்பார்கள் என சுகாதார துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் அனைவரையும் பெற்றோர்கள் பங்கேற்க வைத்து போலியோ சொட்டு மருந்து முகாமை பயன்படுத்தி பயனடையுமாறு பெற்றோர்களுக்கு அதிகாரிகள் மூலம், அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்த போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணிகளில் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது..