தமிழகம் முழுவதும் இன்று போலியோ முகாம்கள் மூலம் தமிழகம் முழுவதும் மொத்தம் 72 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டிருக்கிறது . இதற்காக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்க்களான பேருந்து நிலையம், ரயில் நிலையம், அங்கன்வாடி மையம், துனை சுகாதார மையம், பள்ளிகளில், அரசு மருத்துமனை என 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலியோ முகாம்களையும், தமிழகம் முழுவதும் சொட்டு மருந்து வழங்கும் பணியில் சுமார் 2 லட்சம் அரசு அலுவலர்களையும் சுகாதாரத்துறை ஈடுபடுத்தியுள்ளது. இந்த போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த போலியோ சொட்டு மருந்து முகாமை தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் சென்னை பசுமை வழி சாலையில் உள்ள அவரது இல்லத்தில் துவக்கி வைத்தார். அங்கு அமைக்கப்பட்டிருந்த போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாமில் ஒரு குழந்தைக்கு சொட்டு மருந்து வழங்கி இந்நிகழ்வினை தொடங்கி வைத்தார்.
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…