வடமாநில கொள்ளையர்களின் படுபாதக கொலைகள் நெஞ்சைப் பதற வைக்கின்றன என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சீர்காழியில் தன்ராஜ் என்பவர் நகை அடகு கடை வைத்துள்ளார்.தன்ராஜ் வீட்டில் நேற்று காலை 6 மணி அளவில் வட மாநிலத்தை சார்ந்த 4 பேர் வீட்டில் உள்ளே நுழைந்து வீட்டில் இருந்த 15 கிலோ தங்கம் நகையை கொள்ளையடித்து தன்ராஜ் மனைவி ஆஷா, அவரது மகன் அகில் ஆகிய இருவரையும் கழுத்தறுத்து கொன்று விட்டு நகைகளுடன் வீட்டில் இருந்த சிசிடிவி ஹார்ட் டிஸ்க்கையும்,காரையும் திருடிக் கொண்டு தப்பி சென்றனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, 3 வடமாநில கொள்ளையர்களை போலீசார் கைது செய்தனர். அப்போது அவர்களிடன் இருந்த 2 நகை பைகளில் ஒரு பையை வயலில் வீசியதால் அதை எடுக்க சென்றபோது, 3 பேரில் ஒருவர் போலீசாரை தாக்கி விட்டு தப்ப முயன்றபோது போலீசார் என்கவுன்டர் செய்தனர்.பின்பு சீர்காழி இரட்டைக் கொலை வழக்கில் மூளையாக செயல்பட்ட கருணாராம் என்பவரை போலீசார் கும்பகோணத்தில் வைத்து கைது செய்தனர்.
இந்நிலையில் இது குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், வடமாநில கொள்ளையர்களின் படுபாதக கொலைகள் நெஞ்சைப் பதற வைக்கின்றன. சீர்காழி கொலையில் காவல்துறையினரின் விரைவான செயல்பாடு பாராட்டுக்குரியது. ஆனால், வரும் முன் காக்கும் வகையில் பாதுகாப்பு சோதனைகளும், புலனாய்வுகளும், இரவு ரோந்துப் பணிகளும் முடுக்கிவிடப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…