நடிகர் விஜய்க்கு சவால் விடுத்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்….!!!
நடிகர் விஜய் குறித்து நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான் . ஏனென்றால் தற்போது அவர் எந்த அளவுக்கு புகழின் உச்சத்திற்கு சென்றுள்ளார் என்று நமக்கு தெரியும்.
இந்நிலையில் சர்க்கார் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய் தனது பேச்சால் அனைவரையும் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தினார். இவர் இந்நிகழ்ச்சியில் அரசியல் குறித்தும் பேசியுள்ளார். நான் முதலமைச்சரானால் ஊழலை ஒழிப்பேன் என்று அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் பாஜக மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் நடிகர் விஜய் ஊழல்வாதிகளின் பெயரை குறிப்பிட்டு சொன்னால் அவரை மாலை போட்டு வரவேற்பேன் என்று கூறியுள்ளார். இதனையடுத்து அவர் அனைவராலும், எம்ஜிஆர், ஜெயலலிதா ஆக முடியாது, மக்கள் செல்வாக்கு பெற்ற ஓரே தலைவர் ரஜினிகாந்த் தான் என கூறியுள்ளார்.