மக்கள் மீது காவல்துறை கட்டவிழ்த்துவிடும் வன்முறை நிறுத்தப்பட வேண்டும்- எம்.பி. கனிமொழி ..!

Default Image

சாமான்ய மக்கள் மீது காவல்துறை கட்டவிழ்த்துவிடும் வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும் என கனிமொழி தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டத்தில் வாகன சோதனையின் போது காவலர் தாக்கியதில் வியாபாரி ஒருவர் உயிரிழந்தார். வியாபாரி உயிரிழப்புக்கு காரணமான காவலர்  தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், திமுக எம்.பி. கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில், சாமான்ய மக்கள் மீது காவல்துறை கட்டவிழ்த்துவிடும் வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும். மே 7 க்கு முன்பாக இருந்த மனோ நிலையில் இருந்து மாற வேண்டும். நடப்பது திமுகவின் மக்களுக்கான ஆட்சி என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என பத்திவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்