தனிப்பட்ட வாகனங்களில் POLICE, காவல் என ஸ்டிக்கர்கள் ஒட்ட கூடாது – சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி

Police

பொதுவாக காவலர்கள் தாங்கள் வைத்திருக்கும் இருசக்கர வாழுங்கள் மற்றும் கார்களில் காவல் அல்லது போலீஸ் என ஸ்டிக்கர் ஒட்டியிருப்பதை பார்த்திருப்போம். தற்போது இந்த ஸ்டிக்கர் ஒட்ட கூடாது என சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. உத்தரவு  பிறப்பித்துள்ளார்.

தேசவிரோதிகள், குற்றவாளிகள் மற்றும் ரவுடிகள் சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு ‘போலீஸ்’ ஸ்டிக்கரை தவறாகப் பயன்படுத்துவதால், காவல் அல்லது போலீஸ் என ஸ்டிக்கர் பயன்படுத்துவதற்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்  என தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

வருகிறது டிசம்பர்.! வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு நிலை.!

அந்த சுற்றறிக்கையில், வாகனச் சோதனையின் போது காவலர்கள், காவல்துறை அதிகாரியாக இருக்கலாம் என்று கருதி, ‘போலீஸ் ஸ்டிக்கர்களுடன் வாகனங்களைச் சோதனை செய்யத் தயங்குவதால், பணிக்கு இடையூறு ஏற்படுகிறது.

‘POLICE ஸ்டிக்கர்களை ஒட்டியுள்ள காவல்துறை அல்லாத நபர்கள் ஏமாற்றுதல் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்