பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காவல் நிலையங்களே பாலியல் குற்றங்கள் செய்து கொலை களங்களாக மாறி வருவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் தெரிவித்துள்ளார்.
பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதுகாக்க வேண்டிய காவல் நிலையங்களே பாலியல் குற்றங்களில் ஈடுபட்டு வருவதாக வைகோ தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த சில காலங்களாகவே குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தமிழகத்தில் பெருகி வருவது அன்றாடம் பதிவு செய்யப்பட கூடிய போக்சோ சட்டங்கள் மூலம் தெளிவாக தெரிகிறது. தொடர்ச்சியான வன்கொடுமை செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டே இருப்பது அதிர்ச்சியும் வேதனையும் கொடுக்கிறது. கொரோனா ஊரடங்கால் வருமானத்திற்கு வழி இல்லாத குடும்பங்களில் பள்ளிக்கு செல்ல முடியாமல் வீட்டில் இருக்கிற ஆண் மற்றும் பெண் குழந்தைகள் வேலைக்குச் செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. அரசு நிதி உதவிகள் போதுமான அளவு ஏழை குடும்பங்களுக்கு கிடைக்கவில்லை.
இதனால், நடுத்தர குடும்பங்கள் வறுமைக் கோட்டிற்கு கீழே தற்பொழுது சென்றுவிட்டது. இந்நிலையில், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்த குடும்பத்தினரை பின்னணியாக இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளும்போது கண்ணீர் துளிர்க்கிறது. நாட்டில் தற்பொழுது நிலவுகிற வறுமையின் கொடுமையை உணர முடிகிறது, வாய் பேச முடியாத சிறுமிக்கு அயனாவரத்தில் கொடுமை இழைத்த குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். பெண் குழந்தைகளை பாதுகாப்பதில் பெற்றோர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் பாலியல் குற்றங்களில் பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காவல்துறையினரே ஈடுபடுவதை மன்னிக்க முடியாது எனவும், காவல் நிலையங்கள் கொலைக்களங்களாக மாறி வருவதாகவும், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுகின்ற ஒரு சில காவலர்களால், காவலர்கள் அனைவரின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். குற்றம் இழைக்கின்ற காவலர்கள் மற்றும் பாலியல் தரகர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், சமூகத்தின் அனைத்து தரப்பினரும் அக்கறை கொண்டு குழந்தைகளை பாதுகாப்பதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமெனவும் கேட்டுக் கொள்வதாக அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ராமேஸ்வரம்: தமிழக மீனவர்களுக்கு எதிரான இலங்கையின் தொடர் கைது நடவடிக்கை, மீனவ குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மீண்டும், எல்லை தாண்டி…
சென்னை: தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு தண்டையார்பேட்டை மெட்ரோ ரயில் சுரங்க…
தெலங்காணா: கடந்த டிசம்பர் 4-ம் தேதி 'புஷ்பா 2' சிறப்பு காட்சியின் திரையிடலின் போது, சந்தியா திரையரங்கில் ஏற்பட்ட கூட்ட…
டெல்லி : இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களுக்கு…
கோவை : ஆரோக்கியசாமி சாலை, ராமச்சந்திரா சாலை, டி.பி.ரோடு, லாலி சாலை, தடாகம் சாலை, கவுலிபிரவுன் சாலை, டி.வி.சாமி சாலை,…
சென்னை : விடுதலை 2 திரைப்படம் வெற்றிமாறனின் தலை சிறந்த படைப்புகளின் பட்டியலில் இடம் பெற்றுவிட்டது என்று தான் சொல்லவேண்டும். அந்த…